Thursday, May 11, 2023

வேண்டும்!

விடியாத இரவு வேண்டும்;

கலையாத கனவு வேண்டும்;

பிரியாத உறவு வேண்டும்;

நிற்காத தூறல் வேண்டும்;

வாடாத மலர்கள் வேண்டும்;

வற்றாத நதிகள் வேண்டும்;

இதமான காலை வேண்டும்;

பதமான உணவு வேண்டும்;

குன்றாத கல்வி வேண்டும்;

மங்காத மதி வேண்டும்;

கலங்காத மனம் வேண்டும்;

மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்;

நிம்மதியான நித்திரை வேண்டும்;

சீரான உடல் வேண்டும்;

சுத்தமான காற்று வேண்டும்;

விலகாத நட்பு வேண்டும்;

No comments:

Post a Comment

பேதம்!

சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.