கட்சிகள் ஆயிரம் இருந்தும்,
நம் நாட்டில் குடிசைகள் வாழ்வதில்லை.
அன்பு என்ற மூன்றெழுத்துடன்,
பாசம் என்ற மூன்றெழுத்தும்,
பரிவு என்ற மூன்றெழுத்தும் சேர்ந்தால் -
அட! அம்மா என்ற மூன்றெழுத்து கிடைக்கிறதே!
கம்பீரத்தை சிங்கதொட ஒப்பிடுகின்றனர்;
வீரத்தை காளையோடு ஒப்பிடுகின்றனர்;
நன்றியோடு இருந்தால் நாயோடு ஒப்பிடுகின்றனர்;
தந்திரகாரனாக இருந்தால் நரியோடு ஒப்பிடுகின்றனர்;
சாதுவாக இருந்தால் பசுவோடு ஒப்பிடுகின்றனர்;
இவ்வாறு மனிதனை மிருகங்களுடன் ஒப்பிட்டதால் தான்
மனிதனுக்கு மிருக புத்தி வந்ததோ!
சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.